கம்பிர்-ஸ்ரீஷாந்த் விவகாரம் ..ஹர்பஜனின் சினிமா கருத்து" பெரிய நகரங்களில் சிறிய நிகழ்வுகள்
ஸ்ரீசாந்த் - கம்பீர் விவகாரம் தொடர்பாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் திரைப்பட வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள ஹர்பஜன் சிங், பெரிய நகரங்களில் இதுபோன்ற சிறிய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என சரியாக தனக்கு தெரியாது எனக் கூறியுள்ள ஹர்பஜன், எல்.எல்.சி கிரிக்கெட் தொடர் சிறப்பாக இருந்ததாகப் பேசியுள்ளார்.