முன்னாள் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக், சமீபத்தில் வெளியிட்ட ஆல்டைம் சிறந்த இந்திய கிரிக்கெட் அணியில், தோனியின் பெயரை சேர்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்தில் பேசிய அவர், தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், லெவன் அணியில் விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்து விட்டதாகவும் தெரிவித்தார். தலைசிறந்த வீரரான தோனியை எந்த வடிவிலான அணியிலும் கேப்டனாக சேர்ப்பேன் என்று குறிப்பிட்ட அவர், தனது லெவன் அணியில் மாற்றம் செய்து, ஏழாவது பேட்டிங் வரிசையில் தோனியை சேர்ப்பதாக தெரிவித்தார்.