"முடிஞ்சா தொட சொல்லு பாப்போம்" - கால்பந்து வரலாற்றில் எவரும் தொடாத உச்சம்...

Update: 2024-09-06 02:19 GMT

கால்பந்து வரலாற்றில் 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். UEFA NATIONS LEAGUE தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான போட்டியின் 34வது நிமிடத்தில் இந்த வரலாற்று கோலை ரொனால்டோ பதிவு செய்தார். அதிக கோல் பட்டியலில் ரொனால்டோவிற்கு அடுத்தபடியாக மெஸ்ஸி 842 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 900 கோல் அடித்த தருணம் உணர்ச்சிமிகுந்தது எனவும், தனது கெரியரில் தனித்துவமிக்க மைல்கல் எனவும் ரொனால்டோ நெகிழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்