புதுச்சேரியில் முதல் முறையாக சேவல் சண்டை போட்டி

Update: 2024-07-06 14:28 GMT

புதுச்சேரி சேவல் கலை வல்லுநர்கள் சங்கம் சார்பில்,

புதுச்சேயில் முதன்முறையாக சேவல் சண்டை போட்டி

கோரிமேடு பகுதியில் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் என இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில்

புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா என பல்வேறு மாநிலங்களை சேர்த்த, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் சேவல் உரிமையாளர்களுக்கு பித்தளை அண்டா, குத்து விளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. சேவல் சண்டை போட்டிகளை நடத்த தமிழக, புதுச்சேரி அரசுகள் ஊக்கவிக்க வேண்டும் என சேவல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்