டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 13வது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
கோவையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. மழை காரணமாக ஏழு ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஆறு விக்கெட்டுகளை இழந்து, 64 ரன்கள் எடுத்தது. கேப்டன் அஸ்வின் மட்டுமே அதிரடியாக பேட்டிங் செய்து, 45 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 புள்ளி ஒரு ஓவரில், ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. முன்னதாக, இதே மைதானத்தில் பிற்பகலில் நடைபெற்ற ஆட்டத்தில், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி, 198 ரன்கள் குவித்த நிலையில், சேஸிங் செய்த சேலம் அணியை, 163 ரன்களில் சுருட்டி வெற்றி வாகை சூடியது.