காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ரா... முதல் போட்டியிலேயே மிரட்டல்.. இந்தியா அசத்தல் வெற்றி
அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டப்ளின் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. காயத்தில் இருந்து குணமடைந்து, ஓராண்டுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா, கேப்டனாக பொறுப்பேற்று, டி20 தொடரை வென்று கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.