பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் மகுடம் சூடினார் எலீனா ரைபாகினா... சபலென்காவை சாய்த்து ரைபாகினா அபாரம்
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர்
மகுடம் சூடினார் எலீனா ரைபாகினா...
சபலென்காவை சாய்த்து ரைபாகினா அபாரம்
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா மகுடம் சூடினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா உடன் ரைபாகினா மோதினார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரைபாகினா, 6க்கு பூஜ்யம், 6க்கு 3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.