மகளிர் குத்துச்சண்டை - தைவானின் லின் யூ-டிங் பாலின சர்ச்சை மத்தியில் 1வது ஒலிம்பிக் பதக்கத்தை உறுதிசெய்தார்

Update: 2024-08-04 23:54 GMT

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் பாலின தகுதி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ள தைவானின் லின் யு டிங் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு காலிறுதி போட்டியில் பல்கேரிய வீராங்கனை ஸ்டனிவாவை 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் லின் யு டிங் நுழைந்தார். இதன்மூலம் பதக்கத்தையும் அவர் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே பாலின தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ள அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப்பும் பதக்கத்தை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். தகுதிச் சுற்றில் வெற்றி பெற 8 புள்ளி 15 மீட்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7 புள்ளி 61 மீட்டர் தூரம் நீளம் தாண்டினார். இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்து ஜெஸ்வின் ஆல்ட்ரின் வெளியேறினார். இதேபோல், ஸ்டீப்பிள் சேஸ் மகளிர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 8வது இடம் பிடித்து வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்