வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். இரு டெஸ்ட்டையும் சேர்த்து 114 ரன்கள் அடித்த அஸ்வின், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்தார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 11வது முறை தொடர் நாயகன் விருதை வென்ற அஸ்வின், டெஸ்ட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.