சாதனை படைத்த சர்பராஸ் கான்..உணர்ச்சிவசப்பட்டு அண்ணாமலை போட்ட ட்வீட் | Annamalai | Test Cricket
இந்தியாவிற்காக டெஸ்ட்டில் அறிமுகமாகி அரைசதம் விளாசிய சர்பராஸ் கானுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் அறிமுக வீரருக்கான தொப்பியை பெற்றது, பின்னர் அவரை அவரது தந்தை ஆரத்தழுவியது உள்ளிட்ட காட்சிகளை, அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், தடைகளை தாண்டி குறிக்கோளை நோக்கி ஓடும் ஒருவர் அதனை எட்ட, சரியான நேரத்தில் கடின உழைப்பு, திறமை மற்றும் வாய்ப்பு ஆகியவை ஒன்று சேருவதை இயற்கை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார். சர்பராஸ் கானுக்கு நேற்றைய தினம் அப்படிப்பட்ட ஒரு நாள் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.