2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்; ஒரு புறம் கொரோனா... மறுபுறம் கொண்டாட்டம்...

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன.

Update: 2021-07-23 08:40 GMT
ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன.கொரோனா பரவலால் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகின்றன. ஜப்பான் தேசிய மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழாவில், 206 நாடுகளின் வீரர் வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்த உள்ளனர். தொடக்க விழா நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், வெளிநாட்டு தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 950 பேர் மட்டுமே, தொடக்க விழாவை நேரில் கண்டுகளிக்க உள்ளனர். இதனிடையே, வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு 80-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கொண்டாட்டத்துக்கு ஜப்பான் தயாராகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்