"சச்சின், கோலி பெயரை தவறாக உச்சரித்த டிரம்ப் " - குழப்பத்தை ஏற்படுத்திய அதிபர் டிரம்பின் உச்சரிப்பு

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சச்சின் டெண்டுல்கரை சுச்சின் டெண்டுல்கர் என்றும், விராட் கோலியின் பெயரையும் தவறாக உச்சரித்தார்.

Update: 2020-02-25 03:11 GMT
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொடேரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சச்சின், விராட் கோலி போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை, இந்திய மக்கள் உற்சாகப்படுத்தியதாக தெரிவித்தார். அப்போது, சச்சின் டெண்டுல்கரை சுச்சின் டெண்டுல்கர் என்றும், விராட் கோலியின் பெயரையும் தவறாக உச்சரித்தார். இது அவரது உரையை கேட்டவர்கள் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்