நெருங்கும் மாநாடு.. போனை போட்ட விஜய்-க்கு அன்புமணி சொன்ன மெசேஜ் | Vijay | Anbumani

Update: 2024-10-09 16:01 GMT

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு, நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அன்புமணி ராமதாஸ் இன்று (அக்.9) தனது 56வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அன்புமணி ராமதாஸை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட விஜய், பிறந்த நாள் வாழ்த்து கூறினார். சுமார் 5 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின் போது, விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு, அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்