மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டுமென, வி.சி.க உயர்நிலைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் -
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,
மீனவர்களை விடுதலை செய்வதற்கும், வலைகள், படகுகள் உள்ளிட்ட சொத்துகளை மீட்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
அரசு வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்குத் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் - இதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஆணவக் கொலைகளைத் தடுக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் - எஸ்சி. எஸ்டி, மக்களுக்கு எதிராகப் பெருகிவரும் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.