தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா - மாநிலங்களவையில் கண் சிவந்த வைகோ

Update: 2024-08-06 10:17 GMT

தமிழக மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் இல்லையா என மத்திய அரசிடம், மதிமுக எம்பி வைகோ கேள்வி  எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தின்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் தொடர்பாக மதிமுக எம்பி வைகோ உரையாற்றினார்.சில மீனவர்கள் கொல்லப்படுவதோடு எஞ்சியுள்ள சில மீனவர்கள் இலங்கை அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 875 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதோடு கொலையும் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.தற்போது 83 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருப்பதாக கூறிய வைகோ, பிரதமர் மோடியையும் வெளியுறவு அமைச்சரையும் தான் பலமுறை சந்தித்து இந்த பிரச்சனையை தான் முன்வைத்ததாக கூறினார். தமிழக மீனவர்களும் இந்திய நாட்டின் குடிமக்கள் என்றால்

Tags:    

மேலும் செய்திகள்