காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-21 01:01 GMT
  • இலங்கையில் இன்று நடைபெறும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, நாமல் ராஜபக்ச உள்பட 38 பேர் போட்டி.. ஒரு கோடியே 70 லட்சம் மக்கள் ஜனநாயகக் கடமையாற்றுகின்றனர்...
  • டெல்லியின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் அதிஷி... 5 புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல்.....
  • பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் 41 நாள்களாக போராடிய மருத்துவர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்... மேற்குவங்க அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், முடிவு... 
  • சென்னையில் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாக ஈபிஎஸ் கண்டனம்... உண்மை நிலையை அறியாமல் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில்... 
  • விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றுவதே சவாலாக இருப்பதாக திருமாவளவன் பேட்டி.. மதுரையில் மாவட்ட ஆட்சியர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்றும் குற்றச்சாட்டு.... 
  • அக்டோபர் 27-ம் தேதி நடைபெறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு... விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு... 
  • ஓசூர் அருகே தனியார் நிறுவன பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி..... ஆத்திரமடைந்த உறவினர்கள் வாகனங்களை சூறையாடியதால் பதற்றம்..... போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பபரப்பு.... 
  • திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக, ஆந்திர மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு... உணவு பாதுகாப்பு தரத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா அதிரடி... 
  • திருப்பதி லட்டு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதை... சந்திரபாபு நாயுடு இப்படி எல்லாம் பொய் சொல்வது தர்மமா? என, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி...
  • திருப்பதி கோயிலில் லட்டு தயாரிப்பதற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு... திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை...
  • கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்கு, அரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும்... திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடக அறநிலையத்துறை உத்தரவு...
  • லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அதிகம் உள்ள பகுதியில் இஸ்ரேல் துல்லிய தாக்குதல்.... ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.....
  • வங்கதேசத்திற்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆதிக்கம்... 2ம் நாள் முடிவில் 308 ரன்கள் முன்னிலை... 
Tags:    

மேலும் செய்திகள்