காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-11 00:59 GMT
  • அமெரிக்க அதிபர் தேர்தல் - நேரடி விவாதத்தில் மோதப்போகும் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் ... பென்சில்வேனியா மாகாணம் ஃபிலடெல்ஃபியா நகரில், இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில், அனல் பறக்கும் விவாதம் துவங்குகிறது... 
  • ஜனநாயகமும் தொழில்நுட்பமும் இணைந்து மனித குலத்தின் நலனை உறுதி செய்ய முடியும்... செமி கண்டக்டர் உற்பத்தி துறையினருடன் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேச்சு...
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனநாயகம் தகர்ந்து விட்டது... அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியபோது ராகுல்காந்தி குற்றச்சாட்டு...
  • சீனா மற்றும் பாகிஸ்தானை நமக்கு எதிரியாக வளர்த்ததால், தேச பாதுகாப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு... அப்போதைய தலைவர்கள், அகிம்சை பற்றியே பேசிக் கொண்டு இருந்ததால் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிட்டதாகவும் கருத்து...
  • 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, மதுக்கடைகளை மூடுவதற்கான செயல் திட்டத்தை வரையறுக்க வேண்டும்... அறிவிப்புகளை வெளியிடுமாறு முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை...
  • வி.சி.க. நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்... வி.சி.க. மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்பது அவர்கள் விருப்பம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து...
  • மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கட்டும், அதன்பிறகு பார்க்கலாம் என பா.ம.க. தலைவர் அன்புமணி விளக்கம்... மது பிரச்சினையை இப்போதாவது திருமாவளவன் ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி என்றும் கருத்து...
  • திருமாவளவனின் போராட்டம் மதுவுக்கு எதிரானதா...? கூட்டணிக்கு எதிரானதா...? தி.மு.க. மீது கூட்டணி கட்சிகள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து... 
  • தமிழக ஆளுநர் மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி... ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுவிப்பதில், முதல்வர் ஒப்புதல் அளித்த பின்னும் தகுந்த காரணங்கள் இல்லாமல் நிராகரித்ததாக கருத்து...
  • பணிகளில் தொய்வு காரணமாக 4 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உடனடி உத்தரவு.... மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை..... 
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, வெள்ள தடுப்பு பணிகளை இம்மாதம் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்... நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிகாரிகளுக்கு உத்தரவு...
  • ஆப்ரிக்க நாடான நைஜிரியாவில் ஏற்பட்ட மழை வெள்ளம்... உயிரியல் பூங்காவில் இருந்த 80 சதவீத விலங்குகள் உயிரிழப்பு... 
Tags:    

மேலும் செய்திகள்