காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-08 01:10 GMT
  • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு குறித்து இன்று காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு... கட்சித் தலைவர் விஜய், வீடியோ மூலம் அறிவிக்கிறார்...
  • வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு... தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வகையில் ஏற்பாடு...
  • சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணு கைது - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.... 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், புழல் சிறையில் அடைப்பு....
  • மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி, பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் புகார்... மகாவிஷ்ணு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்...
  • மகாவிஷ்ணு விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி... இந்த விஷயத்தில், அமைச்சர் கொந்தளிப்பது ஏன்? என்பது விரைவில் தெரியவரும் என்று டி.டி.வி தினகரன் பேட்டி....
  • அரசுப்பள்ளியில் சொற்பொழிவாற்ற மகாவிஷ்ணுவை அனுமதித்தது தவறு என்று பிரேமலதா கருத்து.... மகாவிஷ்ணுவை பயங்கரவாதியைப் போல் கைது செய்வது ஏன்? என சீமான் கேள்வி...
  • மதுரை புத்தகத் திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது... மத சாயமோ, சாதி சாயமோ இல்லை, தவறான தகவலை பரப்ப வேண்டாம்... மாணவிகள் சாமி ஆடிய விவகாரம் குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்...
  • இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்களும், கிறிஸ்தவர்களும் திட்டமிட்டு அழிக்க முயன்றார்கள்.... சென்னையில் தனியார் கல்விக்குழும ஆண்டு விழாவில், ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு....
  • நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது..... 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.....
  • தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் வருகிற 13ம் தேதி வரை, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்..... வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அறிவிப்பு ....
  • பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங்கின் பரிசுப் பொருள் திருட்டு... அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஹர்விந்தர் சிங் குற்றச்சாட்டு...
  • இன்றுடன் நிறைவு பெறுகிறது, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள்.... கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா....
Tags:    

மேலும் செய்திகள்