காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135 ஆக உயர்வு... 200க்கும் அதிகமானோர் மாயாமானதாக தகவல்... மீட்புப் பணி நீடிப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம்...
- வயநாடு சூரல் மலை பகுதியில், ஆற்றின் நடுவே ஜிப்லைன் அமைத்து, அந்தரத்தில் கயிறு மூலம் மீட்கப்பட்ட உடல்கள்... 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன...
- வயநாடு பகுதியில் இரவிலும் நீடித்த மீட்பு பணிகள்... வெளிச்சத்துக்காக, ஆட்டோவில் மின் விளக்குகளை கட்டிக் கொண்டு, உடல்கள் மீட்கப்பட்டன...
- வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில், இந்திய கடலோர காவல்படை, ராணுவம் மற்றும் விமானப்படை தீவிரம்... கோவை சூலுர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற ஹெலிகாப்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கானோர் மீட்பு...
- நிலச்சரிவு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக, வயநாடு விரைந்தார், மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன்... பிரதமர் மோடி உத்தரவின்படி, பேரிடர் மீட்பு குழுவினர், முப்படையினர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளை ஒருங்கிணைத்து மீட்பு பணிகளை தொடர திட்டம்...
- கேரளா நிலச்சரிவு இதுவரையில்லாத மிகப்பெரிய பாதிப்பு என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் பேட்டி.... அனைத்து சக்திகளையும் திரட்டி, தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்...
- இன்று வயநாடு செல்ல இருந்த ராகுல்காந்தியின் பயணம் திடீர் ரத்து... இடைவிடாத மழை, மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாது என அதிகாரிகள் அறிவுறுத்தியதால் அறிவிப்பு...
- கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் பலி... கூடலூரை அடுத்த புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாண்குமார் ஆகியோர் உயிரிழந்தாக அறிவிப்பு...
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த, தமிழகத்தை சேர்ந்த கல்யாண் குமாரின் உடல் கூடலூர் எடுத்து வரப்பட்டது... உடலைப் பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர்...
- கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில், ஒரு லட்சத்து 87 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு... நேற்று காலை 80 ஆயிரம் கன அடி திறக்கப்பட்ட நிலையில், மாலையில் கூடுதலாக ஒரு லட்சத்து 7 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு.....
- மேட்டூர் அணை நிரம்பியதால், காவிரி கரையோர பகுதிகளில் சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி நள்ளிரவில் ஆய்வு... குமாரபாளையம் பகுதியில் 204 பேர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்...
- இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி... மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இலங்கையை ஒயிட் வாஷ் செய்து அசத்தல்...
- டி.என்.பி.எல் டி.20 தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, கோவை அணி... முதலாவது குவாலிஃபயர் ஆட்டத்தில், திருப்பூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....