காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-30 01:07 GMT
  • பரபரப்பான டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா அணி த்ரில் வெற்றி.... தென் ஆப்பிரிக்காவை கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.... 
  • டி20 உலகக்கோப்பை வெற்றியால் 20 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசை அள்ளியது இந்திய அணி.... தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு 10 கோடியே 25 லட்சம் பரிசு.... 
  • டி20 உலகக்கோப்பையை 2வது முறையாக கைப்பற்றி இந்தியா அணி அபாரம்... இந்தியாவுக்கு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கபில்தேவ், தோனி வரிசையில் இணைந்தார் ரோகித் சர்மா...
  • டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது... தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது..... 
  • டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டத்தை மாற்றிய சூர்யகுமார் யாதவின் அசத்தல் கேட்ச்... டேவிட் மில்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை லாவகமாக பிடித்ததால் ஆட்டத்தில் திருப்புமுனை..... 
  • உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியால் நாடு பெருமை கொள்வதாக பிரதமர் மோடி வாழ்த்து.. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து...
  • இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்.. பட்டாசு வெடித்தும், நடனமாடியும் உற்சாகம்..... 
  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு... இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..... 
  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார் ராகுல் டிராவிட்... புதிய பயிற்சியாளரை நியமிக்கும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு.... 
  • தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா...... கள்ளச்சாராயம் மரண வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு....
  • விஷச்சாராய விவகாரத்தில் அதிமுக திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாய்ச்சல்.... தேர்தல் தோல்வியை மறைக்க அதிமுக முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு...........
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 ஆயிரம் பக்க அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன... வெளிநாடு அழைப்புகள் தொடர்பாக இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.. 
  • கேரளாவில் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு...மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...
Tags:    

மேலும் செய்திகள்