காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-20 00:48 GMT
  • 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது... சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி... சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.... 
  • தமிழகத்திற்கு மூவாயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு... 500 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்... 
  • 2030க்குள் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்... 2025ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் பட்ஜெட்டில் உறுதி.... 
  • அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில், 'தமிழ் புதல்வன்' திட்டம் அறிமுகம்... அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 'புதுமைப்பெண்' திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு...
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு... பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையே மெட்ரோ வழித்தடம், 2025 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்...
  • நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு.. நாளை முதல் அது நனவாக வேண்டும்........ சமூகநீதியை மையமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை..... 
  • தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை, வார்த்தை ஜாலம்தான் உள்ளது..... எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்....
  • லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 2 என பதிவானதாக நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தகவல்...
  • சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான பணிகள் பத்து நாட்களில் தொடங்கும்... விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்... 
Tags:    

மேலும் செய்திகள்