130 ஆண்டு பழமை.. "எப்போ என்ன வேணாலும் நடக்கலாம்.." - பயத்துடனேயே சொன்ன தூத்துக்குடி மக்கள்

Update: 2024-06-08 08:05 GMT

தூத்துக்குடி மாவட்டம் கடம்பாகுளத்தில் 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலத்தை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பாகுளத்தில் 1890ஆம் ஆண்டு தலைமதகு அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பால சாலை குறுகியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், உடனடியாக சாலையை விரிவுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்