"முற்போக்கான மாற்றங்கள் நிகழும் போது எதிர்ப்பு தவிர்க்க இயலாது" - திருமாவளவன் கருத்து

Update: 2024-02-18 01:41 GMT

விசிக துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூன் நியமிக்கப்பட்டது தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முற்போக்கான மாற்றங்கள் நிகழும் போது, எதிரும் புதிருமான உரையாடல்களை தவிர்க்க இயலாதவை என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே, ஆதவ் அர்ஜூனை துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை, விமர்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தலித் அல்லாதோருக்கு 10 சதவீத கட்டாய அதிகார பகிர்வு என உள்வாங்கியிருப்பதாகவும், அவதூறுகளை கடந்து அமைப்பை வலுவாக்குமாறும் கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்