திருச்சி, திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த பிறகு, குடமுழுக்கு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழகத்தில் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களில், குடமுழுக்கு நடத்த, தொல்லியல் துறைக்கு இந்து சமய அறநிலையத்துறை அழுத்தம் கொடுக்கும் என்றும் கூறினார்.