எம்.ஜி.ஆர் நினைவு தினம்..நினைவிடத்தில் ஈபிஎஸ் சூளுரை | EPS | ADMK | MGR
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.