`குடிமகன்களை' குறிவைத்து... நச்சுனு ஒரு ஐடியா கொடுத்த எடப்பாடி

Update: 2024-07-23 12:36 GMT

`குடிமகன்களை' குறிவைத்து... நச்சுனு ஒரு ஐடியா கொடுத்த எடப்பாடி

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர்விட்டு திரும்பப்பெற வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்தாததால், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கிக் குடித்துவிட்டு, விவசாய நிலங்கள், காலி மனைகள், பூங்காக்களில் மறைவான இடங்கள், சுற்றுலாப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் காலி பாட்டில்களை தூக்கி எறிந்து,

அவை உடைந்து சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் பாதிப்பை குடிமகன்கள் ஏற்படுத்தி வரும் நிலையில்,

அரசுக்கு வருமானம் வரக்கூடிய இந்த டெண்டரை 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடனடியாக காலி பாட்டில்களை திரும்பப்பெறுவதற்கான டெண்டரைவிட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு,

அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்