ஆணிவார ஆஸ்தான தினமான இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி, புது வரவு செலவு கணக்கு தொடங்கப்பட்டது. அப்போது தேவஸ்தான அதிகாரிகள் கடந்த ஒராண்டு வரவு செலவு கணக்கை ஏழுமலையான் முன் படித்து சமர்ப்பித்தனர். பிறகு முதல் வரவாக வரவு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ஸ்ரீரங்கம் கோயில் மங்கள பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் ஆகியவை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.