தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். 11-ஆம் வகுப்பிற்கு சென்ற அவர் மாணவர்களை புத்தகத்தை வாசிக்குமாறு கூறினார். அந்த வகுப்பில் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த அவர், வருகை தராத மாணவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் கஷ்டப்பட்டு படித்தால் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும் என்று மாணவர்களுக்கு அவர் அறிவுரை கூறினார்...