இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க, சுவீடனில் தெரிவித்துள்ளார். ஸ்டொக்ஹோமில் நேற்று உரையாற்றுகையில், 2019ல் கோத்தபய ராஜபக்சவுக்கு வழங்கியது போன்ற ஆதரவைத் தனக்கு வழங்க வேண்டும் என சுவீடன் வாழ் இலங்கை மக்களை அவர் கேட்டுக் கொண்டார்... இந்த சந்திப்பில் சுவீடனிலுள்ள இலங்கையர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.