செந்தில் பாலாஜி ரிலீசுக்கு காரணமான பயங்கரவாத தடுப்பு சட்ட வழக்கு... கேஸையே மாற்றிய `நஜீப்' - யார்..?

Update: 2024-09-27 11:32 GMT

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு வழங்கிய ஜாமினை மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியுள்ள நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

பயங்கரவாத வழக்கினை மேற்கோள் காட்டி செந்தில்பாலஜிக்கு ஜாமின்

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது

பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி அமலாக்கத்துறை வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தியது..

இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர்

செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி..

கிட்டத்தட்ட 15 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கே ஏ நஜீப் வழக்கை முன்னுதாரணம் காட்டி உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு

நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினை அளித்துள்ளனர்..

கேரள பேராசிரியரின் கையை வெட்டி வழக்கில் கைதான நஜீப்

யார் இந்த நஜீப் ?

தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரெண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஆதரவாளராக இருந்தவர்.. கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் கே ஏ நஜீப்.

கடந்த 2010ம் ஆண்டு அதே பகுதியில் இயங்கி வந்த பிரபலமான கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஜோசப் என்பவர் தயாரித்த கேள்வித் தாள்களில் மதத்தைப் பற்றி அவதூறான கருத்துகள் இருந்ததாக கூறி 10 பேர் கொண்ட கும்பல் அவரது கையை வெட்டினர்.

விசாரணை தாமதமானதால் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நஜீப்

இதில் நஜீப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் வழக்குப் பதிவு செய்த என்.ஐ.ஏ நஜீப் உட்பட30 பேரைக் கைது செய்தனர்.

இதில் மூன்று வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்த நஜீப்புக்கு என்.ஐ. ஏ வின் விசாரணையில் காலதாமதம் இருப்பதாகக் கூறிய உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுவித்தது...

தற்போது இந்த வழக்கை மேற்கோள் காட்டிதான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதே நேரத்தில் கடந்த ஜூலை மாதம் கேரளா மாநில என்.ஐ ஏ நீதிமன்றம் பேராசிரியர் ஜோசப் வழக்கில் நஜீப்பிற்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்