கால் வைக்காமலே ஆய்வில் தெரிந்த மாற்றம் - அதிகாரிகள் அதிருப்தி

Update: 2024-09-26 08:17 GMT

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை, தமிழ்நாடு சட்டபேரவை பொதுக்கணக்கு குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். முதலைப்பட்டியில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டபேரவை பொதுக்கணக்கு குழு தலைவரான செல்வபெருந்தகை வருகை தந்திருந்தார். ஆனால், அவர் ஆய்வை முறையாக நடத்தாமல், காரில் இருந்தபடியே ஆய்வை முடித்து விட்டுச் சென்றதாக நகராட்சி அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்