சீல் வச்சாங்க... திரும்ப சீல்-ஐ உடைச்சாங்க... இப்ப மறுபடியும் சீல் - என்ன நடக்குது புதுவையில்

Update: 2023-10-25 13:10 GMT

புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது அறைக்கு வெளியே இருந்த அமைச்சரின் பெயர் பலகை அகற்றப்பட்டு, சட்டப்பேரவை செயலர் தயாளன் கையெழுத்திட்ட சீல் ஒட்டப்பட்டது. முதல்வர் ரங்கசாமி மீண்டும் தன்னிச்சையாக புதிய அமைச்சர் நியமன விவகாரத்தில் முடிவுகளை எடுத்தாலும், சபாநாயகரின் உத்தரவு இல்லாமல் அறையை திறக்க முடியாத சூழல் உருவானது. இதற்கிடையே, சட்டசபை செயலர் தயாளன் கையொப்பமிட்டு ஒட்டப்பட்ட சீலிடப்பட்ட கடிதம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக முதல்வரின் தனி அதிகாரி அமுதன் கையொப்பமிட்ட கடிதத்தால், சந்திரபிரியங்கா பயன்படுத்திய அறைக்கு மீண்டும் சீலிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவருக்கே முழு அதிகாரம் உள்ள நிலையில், அவரது செயலர் உத்தரவின் பேரில் ஒட்டப்பட்ட கடிதம் அகற்றப்பட்டு, முதல்வரின் தனி செயலர் ஒட்டியுள்ள கடிதத்தால், யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்