மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு - ராமதாஸ் எடுத்த நிலைப்பாடு | mahavishnu | ramadoss
அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் நிகழ்ந்த சர்ச்சைக்கு காரணமானவர்கள், பள்ளி கல்வித்துறையில் எந்த உயர் பதவியில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகளை, மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும், மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.