புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் 73ஆவது பிறந்தநாளையொட்டி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா 2 கிராம் தங்க நாயணம் வழங்கினார். புதுச்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதாக தெரிவித்த அமைச்சர் சந்திர பிரியங்கா, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு முதலமைச்சர் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.