உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம்.. தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Update: 2024-01-28 02:16 GMT

உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகளை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவை இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து, விழாவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வு முக்கியமாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் எடுத்த மின்-முயற்சிகளின் தொடக்கத்தைக் காண்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்