ஜனாதிபதி பேசும் போதே... ``நீட், நீட்..'' என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள்... பரபரப்பான அவை...
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இந்த நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றார். மாநிலங்களின் வளர்ச்சியே, தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம் எனவும் Reform, Perform, Transform என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது எனக் கூறினார். உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை அடைந்திருக்கும் இந்தியா, அதில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி வருகிறது என்றார். வந்தே பாரத், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட முர்மு, நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது எனவும் தெரிவித்தார்.