விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து 28 கோடியே 37 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 31 பேர், அரசுக்கு பாதகமாக சாட்சியளித்துள்ளனர். இந்நிலையில் கூடுதலாக சாட்சிகளை விசாரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான உத்தரவு செப்டம்பர் இரண்டாம் தேதி வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்தார்.