லாவோஸ் நாட்டில் கால் வைத்த பிரதமர் மோடி..மகிழ்ச்சியோடு வரவேற்ற பெண்கள் | PM Modi
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி,
இரு நாள் அரசு முறை பயணமாக லாவோஸ் நாட்டிற்கு
சென்றுள்ளார். லாவோஸ் தலைநகரான வியாண்டியேன்
நகரின் விமான நிலையத்தில் அவருக்கு, பாரம்பரிய
முறைப்படி வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும்
அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டின் உள்துறை
அமைச்சர் விளய்வோங் பவுடக்காம் வரவேற்றார். இதனை
தொடர்ந்து டபுள் ட்ரீ ஹோட்டலுக்கு சென்றடைந்த பிரதமர்
மோடிக்கு குழந்தைகள் பெண்கள் உட்பட வெளிநாடு வாழ்
இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.