உயிரை கொடுத்து கத்தியும் பயனில்லை.. விரக்தியின் உச்சம் சென்ற அதிமுகவினர் - இங்கிலீஷில் பறந்த கேள்வி

Update: 2024-06-29 13:51 GMT

பண்ருட்டி நகர் மன்றக்கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் ஒருபக்கம் போராடிக் கொண்டிருக்க...மறுபுறம் கூட்டம் நடத்தப்பட்டது... இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் பாதியிலேயே கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது...

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகர்மன்றக் கூட்டம் வழக்கமான நடைமுறைகளுடன் துவங்கியது... நகர்மன்றத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார்...

அப்போது திடீரென அதிமுக கவுன்சிலர் மோகன் விறுவிறுவென முன்னால் வந்து நகர்மன்றத் தலைவர் இருக்கை முன் தரையில் அமர்ந்து போராடுவோம்...போராடுவோம்...என குரலெழுப்ப... அதற்கு அங்கிருந்தவர்கள் "எதுக்குங்க போராடுறீங்க...?" என்று குழப்பத்துடன் கேள்வி கேட்டனர்...

"போராடுவோம்...போராடுவோம்..."-அதிமுக கவுன்சிலர் தர்ணா

"எதுக்கு போராடுறீங்க?"-நகர்மன்ற உறுப்பினர்கள் கேள்வி

"அநியாயம்...அக்கிரமம்..."-அதிமுக கவுன்சிலர் ஆவேசம்

24வது வார்டு வி.ஆண்டிகுப்பம் நந்தனார் காலனி ஆதிதிராவிடர் பகுதியில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினார் மோகன்... "இது என்ன நியாயம்?...இது என்ன தர்மம்" என்று ஆவேசத்துடன் மோகன் தர்ணாவில் ஈடுபட்டார்...

அதுவரை தமிழில் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த கவுன்சிலர் மோகன், திடீரென ஆங்கிலத்தில் கேள்வி கேட்கத் துவங்கினார்...

சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவு நீர் கால்வாய் என எதையும் முறையாக செய்து தரவில்லை என குற்றம்சாட்டி சாட்சிக்குப் புகைப்படங்களையும் கொண்டு வந்து காண்பித்து படம் போட்டுக் காட்டி கவுன்சிலர் மோகன் கேள்வி எழுப்பினார்...

மோகன் ஒருபுறம் உயிரைக் கொடுத்துக் கத்திக் கத்திப் போராடிக் கொண்டிருக்க மறுபுறம் நகர் மன்றத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் எதையும் கண்டுகொள்ளாமல் கூட்டத்தை வழிநடத்தியதால் அதிருப்தி அடைந்தார் மோகன்...

Tags:    

மேலும் செய்திகள்