"இந்த மா நீ போட்டுக்கோ" சிறிதும் யோசிக்காமல் கூட்டத்தில் ஓ.பி.எஸ் செய்த அந்த செயல்
பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மாநிலங்களவை எம்பி தர்மர், இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் புறப்பட்ட ஓ.பிஎஸ், தனக்கு அளிக்கப்பட்ட சால்வை ஒன்றை, சிறுமி ஒருவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.