ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். நீண்ட காலமாக நிதிஷ் குமாருடன் பயணம் செய்தவர், வக்ஃப் சட்டம், பொது சிவில் சட்டம், காசா போர் விவகாரங்களில் சொன்ன கருத்து கட்சி தலைமைக்கு அதிருப்தி அளித்ததாக சொல்லப்பட்டது. அவரது கருத்துக்கள் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு உதவாத வகையில் அமைந்தது. இந்த சூழலில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து கே.சி. தியாகி இறங்க, அந்த பொறுப்புக்கு ராஜீவ் பிரசாத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.