நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் ராஜினாமா செய்த நிலையில் மேயர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நாளை காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அமைச்சர்கள் கே என் நேரு, தங்கம் தென்னரசு, உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாநகராட்சியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய அறிவுறுத்தல் படி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர்கள் மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.