"நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு.." - கொந்தளித்த தமிழச்சி தங்கபாண்டியன்

Update: 2024-06-09 10:56 GMT

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.... அதில் கலந்து கொண்ட பிறகு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வடமாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருக்கிறது என்று குறிப்பிட்டார்... மோடி அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வணங்குவதாகவும், பாஜகவின் பிம்பம் அடியோடு உடைந்து விட்டதாகவும் தெரிவித்த அவர், தனிப்பெருமை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளோடு ஆட்சி அமைக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான முதல் அடியை இந்தியாவில் 40 தொகுதிகளில் வென்றெடுத்து கொடுத்தது தமிழ்நாடு தான் என பெருமிதம் தெரிவித்தார்... மேலும், நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்காகத் தான் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது என்றார். நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்