"நான் உயிருடன் இருக்கும் வரை.." - இட ஒதுக்கீடு குறித்து கொந்தாளித்த மோடி

Update: 2024-05-13 11:11 GMT

பாஜக ஆட்சியில் 2 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருப்பதால் திருடர்கள் தங்களின் தூக்கத்தை தொலைத்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம், ஹாஜிபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், சமூக நீதி என்ற பெயரில் கை விளக்கை சுமந்து சென்றவர்கள், மாநிலத்தை வறுமையில் தள்ளிவிட்டதாக ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியை மறைமுகமாக சாடினார்.

இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ராமர் கோவிலை இழிவுப்படுத்தி வருவதாக அவர் கூறினார். பீகாரில் காட்டாட்சியை நடத்தி, கால்நடை தீவன வழக்கில் சிறை சென்ற லாலு பிரசாத் யாதவ், இஸ்லாமியர்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேசியிருப்பதாக தெரிவித்தார். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முழுவதையும், இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என லாலு நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தான் உயிருடன் இருக்கும் வரை மக்களுக்கான உரிமைகளையும், இட ஒதுக்கீட்டையும் பறிக்க விடமாட்டேன் என்றும் பிரதமர் மோடி கூறினார். முந்தைய 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், நாடு முழுவதும் வெறும் 35 லட்சம் ரூபாயை மட்டுமே அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாகவும், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்