இந்த தேதிக்குள் பொன்முடி பதவியேற்காவிட்டால் அமைச்சராவதில் சிக்கல்

Update: 2024-03-14 05:47 GMT

தமிழக ஆளுநரின் திடீர் டெல்லி பயணத்தால், அமைச்சராக பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டு, திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பாணை திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து, தமிழக அமைச்சரவையில், பொன்முடி அமைச்சராக இடம்பெறுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கிடையே, தமிழக ஆளுநர் ரவி, 3 நாள் பயணமாக, இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர், மத்திய அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த ஆளுநர் ரவி டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. இந்தப் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், அதன் பிறகு பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதால் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்