பழங்குடி மாணவிகள் சமையலறைக்குள் சென்று பணியாளர்களுடன் சேர்ந்து சமைத்த அமைச்சர்

Update: 2023-08-10 02:59 GMT

உதகையில் பழங்குடியின மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். உதகைக்கு வருகை தந்த அவர், பழங்குடி மாணவிகள் தங்கும் விடுதிக்குள் சென்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச பழங்குடியினர் தின விழாவில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பழங்குடி மக்களுக்கு வழங்கினார். விழாவில் பேசிய அவர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மக்களை பாதுகாக்க தமிழக அரசு தனி ஆணையம் அமைத்துள்ளது என்றும், பழங்குடி மக்கள் அந்த ஆணையத்தில் தங்கள் பிரச்னைகளை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பழங்குடியின மக்கள் வீடு கட்ட மத்திய அரசு 2 லட்சத்து 10 ஆயிரம் மட்டுமே வழங்குவதாகவும், அத்துடன் தமிழக அரசு நிதியை சேர்த்து, 4 லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதாகவும் அவர் கூறினார். தனது துறையின் கீழ் 14 ஆயிரத்து 627 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், அவற்றில் 7 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்