கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து, மக்களை ஒன்றுபடுத்தி, மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2021-ல் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2022-ல் 16 புள்ளி 4 சதவீதமாகவும், 2023-ல் 25 சதவீதமாகவும் உயர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். 2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருவதாகவும் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.