தேசிய மலரான தாமரையை, பா.ஜ.க. சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பா.ஜ.க.வுக்கு தாமரை சின்னத்தை ஒதுக்கி இருப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படியும் தவறு என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.