இன்றுடன் ஓவர்... விருப்பம் தெரிவித்த TRபாலு, ஆ.ராசா..! - தகிக்கும் தமிழக அரசியல்களம்

Update: 2024-03-07 11:03 GMT

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு படிவங்கள் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. மார்ச்1 ஆம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் விருப்ப மனு வழங்குவது நிறைபெற உள்ள நிலையில் கடைசி நாளான இன்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து டி.ஆர்.பாலு விருப்பமனு தாக்கல் செய்தார். இதே போல் தென்சென்னை தொகுதிக்கு தமிழச்சி தங்கபாண்டியன், வடசென்னை தொகுதிக்கு கலாநிதி வீராசாமி, நீலகிரி தொகுதிக்கு ஆ.ராசா ஆகியோர் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுவை தாக்கல் செய்தனர். இதுவரை 600 க்கும் மேற்பட்ட விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்