"புதியதாக 5 மாவட்டங்கள்.." - பிரதமரின் தொலைநோக்கு சிந்தனை | Ladakh | PM Modi | Amit Shah
லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக 5 மாவட்டங்கள் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, தனியாக பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு நிர்வாகத்தில் இருக்கும் யூனியன் பிரதேசத்தில் 2 மாவட்டங்கள் இருக்கும் வேளையில் புதியதாக ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனையை நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். புதிய மாவட்டங்கள் உருவாக்கம் சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய முக்கிய நடவடிக்கை என பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.